
தற்காலத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் திரைப்படங்களை விட சீரியலை அதிகமாக வி
தற்காலத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் திரைப்படங்களை விட சீரியலை அதிகமாக விரும்பி பார்த்து வருகின்றனர். மேலும் ஒருநாள் எபிசோடை கூட தவறவிடாமல் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். இவ்வாறு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. ஆவர் ஒரு குடும்பப் பெண்ணின் கதையை எடுத்துரைக்கும் வகையில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடருக்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
பாக்கியலட்சுமி தொடரில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சதீஷ். அண்மையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கிய அவர் தொடர்ந்து ஏராளமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் சதீஷ் தான் ஒர்க் அவுட் செய்த வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் பாக்கியலட்சுமி கோபியா இது! ஹீரோக்களையே மிஞ்சிட்டாரே என வாயடைத்துப் போயுள்ளனர்.
Advertisement
Advertisement