சினிமா

பாகுபலி காலகேய மன்னனின் உண்மையான முகம் எது தெரியுமா?

Summary:

Bagubali kalakeya mannan real face and photos

பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர்கள் பிரபாஸ், சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் நடித்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் பாகுபலி ஒன்னு மற்றும் இரண்டு.

அதிக பொருள் செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் இந்திய சினிமாவின் ஒரு அத்தியாயம் என்றே சொல்லலாம். இதன் இரண்டு பாகங்களும் மாபெரும் வெற்றி பெற்றது.

இதன் முதல் பாகத்தில் காலகேய மன்னனாக ஒருவர் நடித்திருந்தார். மற்ற நடிகர்களைவிட இவரது கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது. மிகவும் கருப்பாக கொடூரமாக கட்டப்பட்ட இவரது உண்மை முகம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அவருடைய பெயர் பிரபாகர். அவர் நடித்த மரியாத ராமண்ணா படம் 2010ஆம் ஆண்டு சிறந்த தெலுங்கு படத்திற்கான தேசிய விருதை பெற்றது.

மேலும் தொங்கட்டு, ஆகடு, கப்பார் சிங், சைரய்னோடு உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்து பெயர் பெற்றவர். பாகுபலி படத்தில் கருத்த முகத்தில் தழும்புகளுடன் காணப்படும் பிரபாகர், நிஜத்தில் மிகவும் அழகான முகம் கொண்டவர்.


Advertisement