கமலுக்கு வில்லனாகும் பிரபல நடிகையின் கணவர்! இவர் ஏற்கனவே எந்த தமிழ்படத்தில் நடித்துள்ளார் பார்த்தீர்களா!

கமலுக்கு வில்லனாகும் பிரபல நடிகையின் கணவர்! இவர் ஏற்கனவே எந்த தமிழ்படத்தில் நடித்துள்ளார் பார்த்தீர்களா!


bagath-basil-going-to-act-as-villain-to-kamal

மாநகரம், கைதி போன்ற வெற்றி படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து பிரபலமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது விஜய் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் ரிலீஸ் கொரோனா ஊரடங்கால் தள்ளிப்போன நிலையில், தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டதை தொடர்ந்து வருகிற பொங்கல் பண்டிகையை ஒட்டி ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் 232 வது படத்தை இயக்கவுள்ளார். மேலும் இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.இப்படத்திற்கு விக்ரம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் விக்ரம் படம் கிரைம் திகில் கதையம்சத்தில் உருவாகஉள்ளதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கஉள்ளது.

kamal

விக்ரம் படத்திற்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படத்தில் கமலுக்கு வில்லனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் ஃபகத் பாசிலிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் நடிகை நஸ்ரியாவின் கணவர் ஆவார். மேலும்  பகத் பாசில் ஏற்கனவே மோகன் ராஜா இயக்கிய வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்திருந்தார்.