அட.. வேற லெவல்! அரபிக்குத்து பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட பிரபல பேட்மிட்டன் வீராங்கனை! இணையத்தை கலக்கும் வீடியோ

அட.. வேற லெவல்! அரபிக்குத்து பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட பிரபல பேட்மிட்டன் வீராங்கனை! இணையத்தை கலக்கும் வீடியோ


badminton-player-pv-aindhu-dance-to-arabickuthu-song

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் ஹீரோவாக தளபதி விஜய் நடித்துள்ளார். மேலும் இதில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். படம் கடந்த ஏப்ரல் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

பீஸ்ட் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி,கன்னடம் ஆகிய மொழிகளில் உருவான இந்த படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. மேலும் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து, ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்த பாடல்களுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உட்பட பலரும் நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இந்தியாவின் முன்னணி பேட்மிட்டன் வீராங்கனையான பிவி சிந்து அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது