ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
பசுவின் மடியிலிருந்து நேரடியாக பால் குடிக்கும் குழந்தை! அதிர்ச்சிகரமான காரணம்! பதறவைக்கும் வீடியோ..
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தின் கோசிகி பகுதியில் அசாதாரணமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பசு ஒன்றின் மடியில் இருந்து ஒரு குழந்தை நேரடியாக பால் குடிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
பசுவை பலர் தாய் அல்லது தெய்வமாக மதிப்பதால், அந்த பசுவும் தாய்மையுடன் அந்தக் குழந்தைக்கு பாலை ஊட்டுகிறது என கூறப்படுகிறது. இந்த காட்சி உணர்ச்சிவசப்படவைக்கும் வகையிலும் இருக்கிறது.
இருப்பினும், மருத்துவ நிபுணர்கள் கூறுவதாவது, கொதிக்க வைக்காத பசு பாலை நேரடியாக குடிப்பது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது. அந்த பாலில் பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணிகள் போன்ற பல தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் இருக்கக்கூடும். இவை குழந்தையின் உடல் எதிர்ப்பு சக்தியை பாதிக்கவும், ஆரோக்கிய சிக்கல்களை உருவாக்கவும் வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: பிரபலமான ஹோட்டலின் தோட்டத்தில் ஒரே உஷ் உஷ் சத்தம்! போய் பார்த்தால் ஒட்டுமொத்தமாக படம் எடுத்து, சீறி நின்ற தருணம்! பதறவைக்கும் வீடியோ வைரல்!
பலரும் இது போன்ற அறிவில்லாத செயல்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு பெரும் ஆபத்தாக இருக்கலாம் என்று எச்சரிக்கின்றனர்.
அதனால், எதையும் உணர்வோடு பார்க்கும் போதும், ஆரோக்கியக் கவனிப்பும் மிக அவசியம் என்பதே நிபுணர்களின் வலியுறுத்தல்.
Is this good for a baby? Please answer pic.twitter.com/8wXKBvofaO
— Aulia dr (@DonaldTunp75739) July 21, 2025