இரட்டை குழந்தைக்கு தாயான பாபா பட நடிகை - சந்தோஷத்தில் குடும்பத்தினர்!
இரட்டை குழந்தைக்கு தாயான பாபா பட நடிகை - சந்தோஷத்தில் குடும்பத்தினர்!

ரஜினிகாந்த் நடித்த `பாபா' படத்தில் மனிஷா கொய்ராலாவின் தங்கையாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், சந்தோஷி. அதனை தொடர்ந்து பாலா, மாறன், ஆசை ஆசையாய், அன்பே அன்பே, உன்னை சரணடைந்தேன், யுகா, நினைத்தாலே, வீராப்பு, மரியாதை, பொற்காலம் ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். தமிழைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
வெள்ளி திரையில் கலக்கிய இவருக்கு சின்ன திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.அதன் மூலம் சன் டி.வியில் ஒளிபரப்பான `அரசி', `இளவரசி', `மரகத வீணை' போன்ற பல சீரியல்களில் நடித்து இன்னும் பிரபலமானார்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடன் நடித்த நாடக நடிகர் ஸ்ரீகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே 1 ஆம் வகுப்பு படிக்கும் மகன் உள்ள நிலையில் தற்போது மீண்டும் இரண்டு பெண் குழந்தைகளை பெற்றுள்ளார்.இதனால் சந்தோஷியின் கணவர் மற்றும் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.