என்னவொரு மனசு! பாபா பாஸ்கர் சொன்ன விஷயத்தைக் கேட்டு வியந்து போன ரசிகர்கள்! நீங்களும் இதை மறக்காம செய்யுங்க!!baba-baskar-post-about-warning-to-drivers

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி.  தற்போது எந்தப் பக்கம் பார்த்தாலும் குக் வித் கோமாளிய பத்திய பேச்சுதான் உள்ளது. அதற்கு காரணம் அந்த நிகழ்ச்சியில் வரும் அனைவரும் தங்களது ரகளைகளால் பார்வையாளர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருகின்றனர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிக்கு இணையாக சேட்டைகள் செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பாபா பாஸ்கர் மாஸ்டர். இவர் நிகழ்ச்சியில் இருந்தாலே தனியாக தெரியும் அளவிற்கு ஏதாவது செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து விடுவார். 
 

இந்நிலையில் குழந்தை மனம் கொண்ட பாபா பாஸ்கர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் வாகன ஓட்டுனர்களிடம் வேண்டுகோள் விடுத்து கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதாவது வெயில் காலங்களில் நிழலுக்காக வண்டிகளுக்கு அடியில் சிறு சிறு விலங்குகள் இருக்க வாய்ப்பு இருக்கிறது, அதனால் வாகனத்தை எடுக்கும் முன்பு பார்த்துவிட்டு எடுக்கும்படி கேட்டுகொண்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இவரின் மேல் இருந்த மரியாதை ரசிகர்கள் மத்தியில் உயர்த்துள்ளது.