ஈஸ்வரிக்கு என்ன ஆச்சு? ஆஸ்பிடலில் குடும்பம், வீட்டுக்கு அழைத்துச்செல்ல நடக்கும் போராட்டம்... பாக்கியலட்சுமி ப்ரோமோ வைரல்.!Baakiyalakshmi Serial Promo 7 June 2024 

 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி நெடுந்தொடரின் முக்கிய கதாபாத்திரத்தில் கே.எஸ்.சுசித்ரா, சதீஷ் குமார், எஸ்.டி.பி ரோசரி, ராஜலட்சுமி சந்து, ஆர்யன், நந்திதா ஜெனிபர், ரேஷ்மா பசுபுலேட்டி உட்பட பலரும் நடித்து வருகின்றனர். 

கடந்த சில வாரம் வரை பாக்கியலட்சுமி தொடரில், ராதிகா - கோபி தம்பதிக்கு குழந்தை பிறக்கப்போகும் செய்தி தெரியவந்தது. இதனால் உண்டான பிரச்சனையில் கோபி - ராதிகா தம்பதி, கோபியின் தாய் ஈஸ்வரியுடன் வீட்டில் இருந்து வெளியேறினார். மகனின் வீட்டிற்கு சென்ற ஈஸ்வரி உணவு பிரச்சனை காரணமாக அவதிப்படுகிறார்.

இதையும் படிங்க: Siragadikka Aasai Promo: ரோகினியின் மகன் என்பதை அறிந்துகொண்ட கிரிஷ்; இறுதியில் ட்விஸ்ட்... பரபரப்பாகும் சிறகடிக்க ஆசை நெடுந்தொடர்..!

Baakiyalakshmi Serial

மயங்கிய ஈஸ்வரியும், பாசத்தில் பரிதவிக்கும் பாக்கியவும்

இந்நிலையில், சரியான உணவு கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த ஈஸ்வரி, இறுதியாக உறக்கத்திலேயே மயங்கி விடுகிறார். அவரை மருத்துவமனைக்கு கோபி அழைத்து வந்துவிட, தகவல் அறிந்த பாக்கியா தனது குடும்பத்துடன் மருத்துவமனைக்கு விரைகிறார். 

அங்கு உணவு பிரச்சனை காரணமாக ஈஸ்வரி மயங்கியது தெரியவரவே, அதிர்ந்துபோன பாக்கியாவின் மாமனார் ஈஸ்வரியை வீட்டிற்கே அழைத்து சென்றிடலாம் என்று கூறுகிறார். ஆனால், கோபியோ அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். இதனால் ஈஸ்வரியை வீட்டிற்கு அழைத்து செல்லப்போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிங்க: தொடர் தொந்தரவால் பாக்யாவிடம் கோரிக்கை வைத்த கோபி.. அடுத்த வாரம் நடக்கபோவது என்ன?.. ப்ரோமோ வைரல்.!