அட.. அழகிய தமிழ்மகன் படத்தில் நடித்த குட்டி பாப்பாவா இது! நன்கு வளர்ந்து இப்போ சும்மா வேற லெவலில் இருக்காரே!!

தமிழ் சினிமாவில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப


azhagiya-tamil-magan-baby-niveditha-latest-photo-viral

தமிழ் சினிமாவில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் அழகிய தமிழ் மகன். இந்த திரைப்படத்தில் முதன் முதலாக தளபதி விஜய் ஹீரோ மற்றும் வில்லன் என இரு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். மேலும் அழகிய தமிழ்மகன் படத்தில் ஸ்ரேயா, நமீதா, சந்தானம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இத்திரைப்படத்தில் விஜய்யின் பக்கத்து வீட்டு குட்டிப் பாப்பாவாக ரேணு என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் பேபி நிவேதிதா. இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். மேலும் இவர் மலையாளத்தில் பல முன்னணி பிரபலங்களின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மேலும் அதற்காக சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற விருதினையும் பெற்றுள்ளார்.

niveditha

இந்த நிலையில் தற்போது 20 வயது ஆன  நிவேதிதா நன்கு வளர்ந்து ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். அவரது லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை கண்ட நெட்டிசன்கள் அந்த குட்டி பாப்பாவா இது? இப்படி வளர்ந்துட்டாரே என வாயடைத்து போயுள்ளனர்.