அயலி நாயகியின் அடுத்த படத்தின் ஆடியோ லான்ச்... இணையதளத்தில் ட்ரெண்டிங்கான க்யூட் வீடியோ.!

அயலி நாயகியின் அடுத்த படத்தின் ஆடியோ லான்ச்... இணையதளத்தில் ட்ரெண்டிங்கான க்யூட் வீடியோ.!


ayali-fame-abhi-nakchatra-next-movie-audio-lauch-cute-v

அயலி திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் அபி நட்சத்திரா. இதனைத் தொடர்ந்து தற்போது லைசென்ஸ் என்னும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படம் வெகு விரைவிலேயே வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி கடந்த மே 28ஆம் தேதி  பிரசாத் லேபிள் வைத்து நடைபெற்றது.

ஜேஆர்ஜி ப்ரொடக்ஷன் சார்பில் ஜீவானந்தம்  தயாரிக்கும் இந்த திரைப்படத்தை கணபதி பாலமுருகன் என்பவர் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் பலம்பெரும் நடிகர் ராதாரவி  தயாரிப்பாளர் ஜீவானந்தம் விஜய் பாரதி மூத்த அரசியல்வாதி பல கருப்பையா மற்றும் அயலி புகழ்  அபி நட்சத்திரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தத் திரைப்படத்தில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி செந்தில்  கதாநாயகியாக நடிக்கிறார்.

abhinakshatra

அயலி திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருந்த அபி  நட்சத்திரா இந்தத் திரைப்படத்திலும் முன்னடித்திருப்பதால்  இதற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டின் போது பேசிய அவர் வித்தியாசமான கதைக்களங்களில் தொடர்ந்து நடிப்பது  மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் இருப்பதாக தெரிவித்தார்.

இவருடைய இந்த  நிகழ்ச்சியின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி இருக்கிறது. க்யூட்டாக அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விதமும் அவர் நிகழ்ச்சியில் பேசியதும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்காக இருக்கிறது.