அவன் இவன் பட நடிகர் உடல்நலக் குறைவால் காலமானார்.! திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல்!!

அவன் இவன் பட நடிகர் உடல்நலக் குறைவால் காலமானார்.! திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல்!!



avan-ivan-movie-actor-ramaraj-dead

கடந்த 2011ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் ஆர்யா மற்றும் விஷாலின் அசத்தலான நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற படம் 'அவன் இவன்'. இந்த படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகர் ராமராஜ்.

இவர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள மேல சாக்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணிபுரிந்துள்ளார். பின் அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து சினிமாவுக்கு வந்தார்.

அவன் ivan

இவர் கடந்த ஒரு மாதமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இந்நிலையில்
72 வயது நிறைந்த ராமராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் தற்போது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.