அடஅட.. இந்த வயசுலயும் என்னா டான்ஸ்! ஏ.ஆர் ரகுமான் பாடலுக்கு ஆட்டோக்காரர் போட்ட ஆட்டத்தை பார்த்தீர்களா!!

அடஅட.. இந்த வயசுலயும் என்னா டான்ஸ்! ஏ.ஆர் ரகுமான் பாடலுக்கு ஆட்டோக்காரர் போட்ட ஆட்டத்தை பார்த்தீர்களா!!


auto-driver-dance-to-ar-rahman-song-video-viral

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் ஆயிரக்கணக்கான ஹிட் பாடல்களை கொடுத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான். இவரது பாடல்கள் என்றால் மயங்காதவர்களே இல்லை. ஏ.ஆர் ரகுமானின் பாடலுக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

மெல்லிசை முதல் கேட்போரை குத்தாட்டம் போட வைக்கும் வகையில் ஏ.ஆர் ரகுமான் எக்கச்சக்கமான பாடல்களை கொடுத்துள்ளார். இந்த நிலையில் சற்று வயதான ஆட்டோ டிரைவர் ஒருவர் ஏ.ஆர் ரகுமானின் பாடலை கேட்டு சாலையிலேயே அசத்தலாக நடனம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

குறிப்பிட்ட வீடியோவில், பெட்ரோல் போடுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஆட்டோக்காரர் ஒருவர் ஏ.ஆர்.ரகுமானின் காதலன் படத்தில் இடம்பெற்றுள்ள முக்காலா முக்காலா பாடலுக்கு செம ஸ்டைலாக ஸ்டெப்ஸ் போட்டு நடனமாடியுள்ளார். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதனை கண்ட பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.