"படங்களில் கூட காட்டாத கவர்ச்சியில் 'அட்டகத்தி' பட நடிகை!" வைரல் போட்டோஷூட் புகைப்படங்கள்!



Attakathi movie actress glamour photos

2012ம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கிய "அட்டகத்தி" திரைப்படத்தில் அறிமுகமானவர் நந்திதா ஸ்வேதா. முதல் படத்திலேயே அவரது யதார்த்தமான நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. முன்னதாக 2008ம் ஆண்டிலேயே கன்னடத்தில் "நந்தா லவ்ஸ் நந்திதா" படத்தில் அறிமுகமாகியிருந்தார்.

actress

இதையடுத்து 2013ம் ஆண்டு "எதிர்நீச்சல்" படத்தில் நடித்த நந்திதா, அதே ஆண்டு வெளியான "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" நகைச்சுவைத் திரைப்படத்திலும் நடித்து அசத்தியிருந்தார். இந்தப் படத்தில் அவரது கேரக்டர் மிகவும் பேசப்பட்டது.

விஜயின் "புலி" படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்த இவருக்கு, அதையடுத்து வேறு படவாய்ப்புகள் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. அதனால் நந்திதா தனது தாய்மொழி கன்னடத்தில் கவனம் செலுத்தி வருகிறார். திறமையான நடிகையாக இருந்து வாய்ப்புகள் அமையாமல் இருக்கிறார் நந்திதா.

actress

இந்நிலையில் தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகளைப் பெறுவதற்காக , படங்களில் கூட காட்டாத அளவுக்கு கவர்ச்சியாக உடையணிந்து போட்டோஷூட் நடத்தி வரும் நந்திதா ஸ்வேதா, அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.