அட்லீ - பிரியா தம்பதியினருக்கு குழந்தை பிறந்தாச்சு... என்ன குழந்தை தெரியுமா.? வைரலாகும் ட்விட்டர் பதிவு!!

அட்லீ - பிரியா தம்பதியினருக்கு குழந்தை பிறந்தாச்சு... என்ன குழந்தை தெரியுமா.? வைரலாகும் ட்விட்டர் பதிவு!!


Atlee Priya couple blessed with baby boy

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக முதலில் பணியாற்றி பின் தனது கடின உழைப்பால் உயர்ந்து இன்று பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் அட்லீ.  இவர் முதலில் ராஜா - ராணி திரைப்படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். அவருக்கு முதல் படமே நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்ற  நிலையில் ரசிகர்களின் மத்தியில் மேலும் பிரபலமானார்.

அதனை தொடர்ந்து தளபதியை விஜயை வைத்து தெறி, மெர்சல்,பிகில் என மாபெரும் வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். இந்நிலையில் இயக்குனர் அட்லீ தனது தோழியும், காதலியுமான நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

அட்லீ - பிரியா தம்பதியினருக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிய நிலையில் சமீபத்தில் தான் பிரியா கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது அட்லீ, பிரியா தம்பதியினருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை கேட்டு ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.