சினிமா

அட.. உண்மையிலே இது அட்லீதானா! வெறித்தனமான ஹேர்ஸ்டைலில் வேற லெவலில் இருக்காரே! வாயடைத்துப்போன ரசிகர்கள்!

Summary:

கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று செம ஹிட்டான ராஜ

கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று செம ஹிட்டான ராஜாராணி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இவர் இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்தவர். 

இப்படத்தை தொடர்ந்து அவர் தளபதி விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கி தற்போது முன்னணி இயக்குனராக உயர்ந்துள்ளார்.  இயக்குனர் அட்லீ அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றை இயக்க இருக்கிறார். ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் இப்படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் அப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அட்லீ தற்போது ஹேர் ஸ்டைலை மாற்றி புதிய கெட்டப்பில் செம ஸ்டைலாக மாறியுள்ளார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில், அதனைக் கண்ட நெட்டிசன்கள் அட்லீயா இது என வாயடைத்துப் போயுள்ளனர்.


Advertisement