இப்படி மாட்டிக்குறாரே.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அஸ்வின்!! என்ன செய்துள்ளார் தெரியுமா??

இப்படி மாட்டிக்குறாரே.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அஸ்வின்!! என்ன செய்துள்ளார் தெரியுமா??


aswin-post-make-controversy

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அஸ்வின். அதன் மூலம் அவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவானது. அதனைத் தொடர்ந்து அஸ்வின் பல ஆல்பம் பாடல்களில் நடித்திருந்தார். அனைத்துமே செம ஹிட்டானது. பின்னர் அஸ்வின் என்ன சொல்லப் போகிறாய் என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. இப்படம் வெளிவருவதற்கு முன்பு அதன் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய அஸ்வின், நான், இதுவரை 40 கதைகளைக் கேட்டு தூங்கி இருக்கிறேன். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை என்ன சொல்ல போகிறாய் மட்டுமே எனக் கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் பலரும் அவரை மோசமாக விமர்சனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து அஸ்வின் அதற்கு மன்னிப்பு கேட்டு விளக்கமும் அளித்திருந்தார்.

aswin

ஆனாலும் ரசிகர்கள் சமாதானம் அடையவில்லை. அவரைத் தொடர்ந்து கலாய்த்து வந்தனர். இந்த நிலையில் தற்போது அஸ்வின் வெளியிட்ட பதிவு ஒன்று மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அதாவது  அதில் அஸ்வின், பழிவாங்குவதற்கு எனக்கு மிகவும் சோம்பேறித்தனமாக உள்ளது. எதுவாக இருந்தாலும் கர்மா பார்த்துக்கொள்ளும் என்பதைப்போல்  பதிவிட்டுள்ளார். இது வைரலான நிலையில் நெட்டிசன்கள் மீண்டும் அவரை கலாய்க்க துவங்கியுள்ளனர்.