பெண்களிடம் சில்மிஷங்களா.! நான் அப்படி நினைத்துதான் பழகினேன்.! மனம் திறந்த அசல் கோலார்.! வைரல் வீடியோ!!

பெண்களிடம் சில்மிஷங்களா.! நான் அப்படி நினைத்துதான் பழகினேன்.! மனம் திறந்த அசல் கோலார்.! வைரல் வீடியோ!!


asal-kolar-live-chat-after-eliminating-from-bigboss

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6. முந்தைய சீசன் போல் இல்லாமல் இதில் முதல் வாரத்திலிருந்தே சண்டைகள், மோதல்கள் உருவாகி சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இருந்து முதல் வாரத்திலேயே ஜி.பி முத்து தானாக வெளியேறினார். அவரை தொடர்ந்து டான்ஸ் மாஸ்டர் சாந்தி எலிமினேட் ஆனார்.

மேலும் கடந்த வார இறுதியில் அசல் கோலார் குறைந்த வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இண்டிபென்டன்ட் சிங்கராக பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்த இவருக்கு துவக்கத்தில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் பிக்பாஸ் வீட்டில் பெண்களிடம் அத்துமீறி அவர் செய்த சில்மிஷங்கள் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி விமர்சனங்கள் கிளம்பியது.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அசல் கோலாரின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்ட அசல், பெண் போட்டியாளர்களிடம் நடந்து கொண்டது குறித்து, நான் பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரையும் எனது குடும்பத்தினரை போலவே பார்த்தேன், சொந்தக்காரங்க வீட்டிற்கு சென்றால் எப்படி இருப்பேனோ அப்படித்தான் பிக்பாஸ் வீட்டிற்குள்ளும் இருந்தேன்.

அப்படி தவறான கண்ணோட்டத்தில் நான் பார்த்திருந்தால் அவர்களுக்கு தெரிந்திருக்காதா? என்னை விட்டு வைத்திருப்பார்களா.. இவ்வளவு கேமரா இருக்கும்போது எப்படி நான் தப்பான எண்ணத்தில் பார்க்க முடியும். நான் தவறானநோக்கத்தில் எதுவும் செய்யவில்லை. பார்த்தவர்களுக்கு அவ்வாறு தெரிந்திருந்தால் கண்டிப்பாக என்னை மாற்றிக் கொள்கிறேன். மன்னித்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.