அந்த விஷயத்துல ஸ்ட்ராங்கா இருக்க ஆர்யா சொன்ன பிட்னஸ் ரகசியம்.?

அந்த விஷயத்துல ஸ்ட்ராங்கா இருக்க ஆர்யா சொன்ன பிட்னஸ் ரகசியம்.?


Arya openup about his fitness seceret

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ஆர்யா. இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து பல வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்திருக்கிறார். தற்போது முத்தையா இயக்கத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்த 'காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்' திரைப்படம் திரையரங்கில் வெளிவர தயாராகிக் கொண்டிருக்கிறது.

aarya

இப்படத்தில் சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரபு, நரேன், பாக்யராஜ் போன்ற முக்கிய பிரபலங்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் ப்ரமோஷன் வேலைகளில் ஆர்யா மற்றும் படக்குழுவினர் பிஸியாக உள்ளனர்.

சமீபத்தில் சேலத்தில் நடைபெற்ற பிரமோஷன் மற்றும் டிரைய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளார் ஆர்யா மற்றும் சித்தி.  ரசிகர்களின் தொல்லையால் மேடையில் இருந்து இறங்கி அங்கிருந்து ஓடி சென்றனர்.

aarya

இதனை அடுத்து மற்றொரு ப்ரோமோஷனில் கலந்து கொண்ட ஆர்யா பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது, தனது பிட்னஸ் ரகசியத்தை கூறியிருக்கிறார்.அவர் கூறியதாவது, "ஜிம்மிற்கு செல்வதை ஒரு கடமையாக நினைத்து செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே வாழ்நாள் முழுவதும் பிட்டாக இருக்க முடியும். அது ஒன்றும் விளையாட்டு காரியமில்லை. தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்"