சினிமா

முதன்முதலாக தனது மகளின் பெயரை அறிவித்த நடிகர் ஆர்யா! அட.. அதில் அவரோட பேரும் இருக்கே! குவியும் வாழ்த்துக்கள்!!

Summary:

முதன்முதலாக தனது மகளின் பெயரை அறிவித்த நடிகர் ஆர்யா! அட.. அதில் அவரோட பேரும் இருக்கே! குவியும் வாழ்த்துக்கள்!!

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்து சாக்லெட் பாயாக இளம்பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தவர் நடிகர் ஆர்யா. இவர் இறுதியாக சார்பட்டா பரம்பரை என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.நடிகர் ஆர்யா கடந்த 2019 ஆம் ஆண்டு கஜினிகாந்த் என்ற படத்தில் நடித்த போது தனக்கு ஜோடியாக நடித்த  நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

சாயிஷா ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த வனமகன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் பிரபலங்களுடன் இணைந்து சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ஆர்யா மற்றும் சாயிஷா ஜோடிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.

இதனை மிகவும் மகிழ்ச்சியுடன் நடிகர் விஷால் தான் மாமாவாகி விட்டதாக கூறி அறிவித்திருந்தார். இந்த நிலையில் முதல்முதலாக நடிகர் ஆர்யா தனது மகளின் பெயரை வெளியிட்டுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நான் அப்பாவாக இரு மாதங்களை கழித்துவிட்டேன். மகள்கள் தின வாழ்த்துகள் 'அரியானா' என தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

 

 


Advertisement