சினிமா

மகாகவி கொரோனோ! பாரதியார் வரிகளுடன் முன்னெச்சரிக்கையாக குட்டி ஸ்டோரி பிரபலம் வெளியிட்ட முக்கிய பதிவு!

Summary:

arunraja kamaraj tweet about korono awarness

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 3000க்கும் அதிகமான பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 90000க்கும் அதிகமானோர்  பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் உலக நாடுகளே பெரும் அச்சுறுத்தலில் உள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல்கள்  இதனால் இந்திய மக்கள் அனைவரும் பெரும் பீதியில் உள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்தியகுடியரசு மாளிகையில் திட்டமிடப்பட்டிருந்த ஹோலிப்பண்டிகை நிகழ்ச்சிகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.பொதுமக்களுக்கும் தொடர்ந்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது.

அருண்ராஜா காமராஜ்க்கான பட முடிவுகள்

இந்நிலையில் இயக்குனர், நடிகர் பாடலாசிரியர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். இவர் மாஸ்டர் படத்திற்காக குட்டி ஸ்டோரி பாடலை எழுதியுள்ளார். இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை விழிப்புணர்வை  ஏற்படுத்தும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 அதில் அவர் சாதிகள் இல்லையடி பாப்பா, எல்லா ஜாதிகளையும் சமமாக பார்க்கும் மகாகவி கொரோனா எனவும் பதிவிட்டுள்ளார்.


Advertisement