மூளை சர்ஜரிக்கு பின், அர்ச்சனா வெளியிட்ட முதல் பதிவு! ரொம்ப பெருமையாக என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!

மூளை சர்ஜரிக்கு பின், அர்ச்சனா வெளியிட்ட முதல் பதிவு! ரொம்ப பெருமையாக என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!


archana-first-tweet-after-surgery

சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளினிகளுள் ஒருவராக இருப்பவர் அர்ச்சனா. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆஸ்தான தொகுப்பாளினியாக இருந்த அவர் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இதனால் அவர் சில விமர்சனங்களையும் சந்தித்துள்ளார்.

மேலும் அர்ச்சனா தற்போது விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இந்தநிலையில் அர்ச்சனாவிற்கு அண்மையில், மூளையின் அருகே சிறு கட்டி இருப்பது கண்டறியப்பட்டு அதற்கான அறுவை சிகிச்சையும் நடைபெற்றுள்ளது. பின்னர் சிகிச்சை முடிந்து அவர் வீல்சேரிலே வீட்டிற்கு வந்த புகைப்படங்கள் வெளியானது.

இந்த நிலையில் அறுவை சிகிச்சைக்கு பிறகு, நீண்ட நாட்களுக்கு பின் அர்ச்சனா தனது ட்விட்டர் பக்கத்தில் முதல் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர்,  ஒரு அறுவை  சிகிச்சை உங்களை வீழ்த்தும் போது,' நீங்கள் ஒரு ராக்ஸ்டார் அம்மா. உனக்குள் உள்ள சாத்தானை வெளியே துரத்தி விடு. பிறகு வலியாவது ஒன்னாவது என்று' உங்கள் மகள் உங்களிடம் சொல்வாள். பின்னர் நீங்கள் பாதுகாப்பான மீட்கும் கரங்களில் இருப்பதை தெரிந்து கொள்வீர்கள் என பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார்.