சினிமா

சோம் சேகரை பார்த்து அர்ச்சனா கூறிய அந்த வார்த்தை! கடுப்பாகி பிரபல முன்னணி நடிகைகள் கூறியுள்ளதை பார்த்தீர்களா!

Summary:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா, சோம்சேகரை பார்த்து மாமா என கூறியதற்கு நடிகை ஸ்ரீப்ரியா மற்றும் கஸ்தூரி விமர்சனம் செய்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஆகிய 6 பேர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர். மேலும்  கடந்த வாரம் டபுள் எவிக்சனில் ஜித்தன் ரமேஷ் மற்றும் நிஷா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினர். 

பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக அர்ச்சனா நுழைந்தபோது கேமில் நல்ல மாற்றம் இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆரம்பத்தில் படுசூடாக நுழைந்த அவர் பின்னர், ரியோ, நிஷா, சோம், கேப்ரில்லா என தனக்கென ஒரு குழுவை அமைத்து ராஜ்யம் நடத்துவது போன்று கருத்துக்கள் எழுந்தது.

ஆனால், நேற்றைய நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான வெளிப்படையான நாமினேஷன் நடைபெற்றது. இந்நிலையில் அனிதா மற்றும் ரியோவிற்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அனிதா சோமிடம், ரியோவிடம் தனியாக பேச வேண்டும் என சொன்னதாக  கூறச்சொல்லியுள்ளார். இதை  சோம் ரியோவிடம் கூறியுள்ளார். உடனேஅர்ச்சனா நீ தான் அவருக்கு தூதுவரா ? நீ என்ன மாமாவா என்று சோமை பார்த்து அவதூறாக பேசியுள்ளார். இதனால் ரசிகர்கள் அர்ச்சனாவை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வரும் நடிகை ஸ்ரீபிரியா தனது டுவிட்டர் பக்கத்தில், தூது போகிறவர் எல்லாம் மாமாவா? என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு கஸ்தூரி அனுமன் வகையறா னு சொல்லாம விட்டார்களே என கிண்டலாக பதில்  அளித்துள்ளார்.


Advertisement