பன் பட்டர் ஜாம்.. அதிதி ஷங்கர் குரலில் வெளிவந்த காஜூமா பாடல்!! இணையத்தில் வைரல்.!
அடிதூள்.. வருத்தத்தில் இருந்த தளபதி ரசிகர்களுக்கு ஹேப்பியான நியூஸ்! அட.. என்னனு பார்த்தீங்களா!!

தளபதி விஜய் கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஏப்ரல் 13 தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக திரைப்படம் பீஸ்ட். இதில் விஜய்க்கு ஜோடியாக, ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் அபர்ணா தாஸ், சதீஷ், செல்வராகவன், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்
இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் உலகெங்கும் வெளியாகியுள்ளது. பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது. மேலும் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிகுத்து, ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ஹிட்டானது.
இந்த நிலையில் அரபிக்குத்து பாடல் படைத்த சாதனை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அரபிக்குத்து பாடல் வெளியாகி யூடியூபில் 6 மில்லியன் லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.