ஐய்யா.. இனி ஒரே ஜாலிதான்.! அறந்தாங்கி நிஷா வீட்டிற்கு வந்த புதுவரவு.! செம ஹேப்பியில் குடும்பத்தினர்!!Aranthangi nisha brother blessed with boy baby

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமான கலக்கப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்து கவர்ந்தவர் அறந்தாங்கியைச் சேர்ந்த நிஷா. அதனைத் தொடர்ந்து புகழின் உச்சிக்குச் சென்ற அவர் விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார். அவர் தனது கணவருடன் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

தொடர்ந்து நிஷா விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். நிஷாவிற்கு பட வாய்ப்புகளும் வந்த நிலையில் அவர் சினிமாவிலும் களமிறங்கி சில படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார். அவர் தற்போது மிஸ்டர் அண்ட் மிஸ்டர் சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

நிஷா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து அவ்வப்போது தனது குடும்ப புகைப்படங்களை பகிர்வார். இந்த நிலையில் தற்போது  அறந்தாங்கி நிஷாவின் தம்பிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதனை அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் 'எனக்கு மருமகன் பொறந்திட்டான். ஐய்யா ஒரே ஜாலிதான்!' என பகிர்ந்துள்ளார். அது வைரலான நிலையில் பலரும் அவர்களுக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.