சினிமா

ப்பா.. என்னா ஆட்டம்.. அர்ச்சனா வீட்டில் செம ஆட்டம் போட்ட அறந்தாங்கி நிஷா.. வைரல் வீடியோ.

Summary:

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீ

தொகுப்பாளினி அர்ச்சனா வீட்டு விசேஷத்தில் அறந்தாங்கி நிஷா போட்ட குத்தாட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

தொலைக்காட்சியில்  தொகுப்பாளினியாக பணிபுரிந்து, தனது கலகலப்பு பேச்சால், சிரிப்பால்ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றவர் அர்ச்சனா. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்தநிலையில், சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் நான்கில் வைல்ட் கார்ட் போட்டியாளராக கலந்துகொண்டு விளையாடினார் அர்ச்சனா.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின், தனது வேளைகளில் கவனம்செலுத்திவருகிறார். இந்நிலையில் அர்ச்சனாவின் தங்கை அனிதாவிற்கு சமீபத்தில் அவரது வீட்டில் கோலாகலமாக வளைகாப்பு விழா நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் போட்டியாளர்களான ஆரி,  சுரேஷ் சக்ரவர்த்தி, ரமேஷ், சோம், சம்யுக்தா, கேப்ரில்லா, அனிதா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். இந்நிகழ்ச்சியில் காமெடி நடிகை அறந்தாங்கி நிஷாவும், அர்ச்சனாவும் குத்தாட்டம் ஆடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement