இந்தியா சினிமா

கேரளாவில் வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களுக்கு அவரின் பாடலை நிதியுதவியாக அளித்த ஏ.ஆர் ரகுமான்..!

Summary:

கேரளாவில் வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களுக்கு அவரின் பாடலை நிதியுதவியாக அளித்த ஏ.ஆர் ரகுமான்..!


கேரளாவில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில்,மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக ஒட்டு மொத்த மாநிலமும் முடங்கிப்போயுள்ளது.

 கேரளா மக்கள் படும் அவஸ்த்தை நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், பள்ளி சிறுமிகளும் நிவாரண நிதி அளித்துவருகின்றனர்.

அங்கு பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலச்சரிவில் கேரளா மக்கள் தொடர்ந்து தத்தளித்து வருவதால், கேரளாவுக்கு உதவுமாறு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டார்.  

இதையடுத்து உலக நாடுகள் முழுவதும் பல்வேறு மாநிலங்களும் போட்டி போட்டுக் கொண்டு கேரளாவுக்கு நிவாரண பொருட்களும்,  நிதி உதவியும் செய்து வருகின்றனர்

இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அமெரிக்காவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கேரள மக்களுக்காக பாடல் ஒன்றை பாடியுள்ளார். அந்த பாடல் கேரள மக்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. எனவும் கூறுகின்றனர்.

அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்தி வரும் ஏ.ஆர்.ரகுமான்,  நிகழ்ச்சியில் “முஸ்தப்பா….முஸ்தப்பா….” என்ற பாடலை பாடியுள்ளார். அந்த பாடலை முடிக்கும் பொது கேரளா..கேரளா..டோன்ட் வொரி கேரளா, காலம் நம் தோழன் என பாடியுள்ளார்.  இதன் மூலம் உலக அளவில் கேரளாவின் துயரம் தெரிய வரும், உதவிகள் பெருகும் என கூறப்படுகிறது.


Advertisement