சினிமா

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் வீட்டில் நேர்ந்த பெரும் துயரம்! சோகத்தில் மூழ்கிய குடும்பத்தார்கள்!

Summary:

ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் அவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று காலமாகியுள்ளார்.

கடந்த 1992-ம் ஆண்டு ரோஜா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்  ஏ.ஆர் ரஹ்மான். அவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் ஆயிரக்கணக்கான ஹிட் பாடல்களை கொடுத்து, தற்போது முன்னணி இசையமைப்பாளராக ரசிகர்கள் மத்தியில் கொடிகட்டி பறக்கிறார். இவருக்கென இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இவர் தனது பாடலுக்காக ஏராளமான தேசிய விருதுகளையும், ஆஸ்கர் விருதினையும் பெற்றுள்ளார்.

சிறுவயதிலேயே தந்தை இறந்துவிட்டநிலையில், ஏ.ஆர்.ரகுமான் முழுவதும் தனது தாய் கரீமா பேகம் அரவணைப்பிலேயே வளர்ந்தார். அவர் ஏ.ஆர்.ரகுமான்க்கு இசையின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்து அவரது இசை பயணத்திலும் முக்கிய பங்கு வகித்தார். ஏ.ஆர்.ரகுமான்க்கு தனது தாயின் மீது அளவுக்கு மீறிய அன்பு உண்டு. 

கரீமா பேகம்

இந்நிலையில், ஏ.ஆர். ரகுமானின் தாயார் கரீமா பேகம் அவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று காலமானார். அதனை தொடர்ந்து அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


Advertisement