சினிமா

பிரபல ஹாலிவுட் படத்திற்கு இசை அமைக்கிறார் AR ரஹ்மான்! எந்த படத்திற்கு தெரியுமா?

Summary:

AR Rahman composing music for avenger end came

ஹாலிவுட் படங்கள் என்றாலே உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்பு எழுவது உண்டு. அந்தவகையில் சர்வதேச ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’. இந்த படம் வரும்  ஏப்ரல் 26 ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’  படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெளிவர இருக்கிறது. இந்நிலையில் இந்த மூன்று மொழி படங்களிலும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைக்க உள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் படத்தின் பாடல்கள் வரும் ஏப்ரல் ஒண்ணாம் தேதி வெளியாகலாம் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.


Advertisement