சினிமா

கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் நடிகை அனுபமாவிற்கு திருமணமா? உண்மையை போட்டுடைத்த அவரது தாயார்!!

Summary:

மலையாளத்தில் பிரேம் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் தம

மலையாளத்தில் பிரேம் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் தமிழில் கொடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். இந்த நிலையில் அனுபமா பரமேஸ்வரனும் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் காதலிப்பதாக கடந்த சில காலங்களுக்கு முன்பு வதந்திகள் பரவியது.

அதனை தொடர்ந்து  தற்போது அனுபமா மற்றும் பும்ரா இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக இணையத்தில் தகவல்கள் தீயாய் பரவி வருகிறது. இந்நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை அனுபமாவின் அம்மா பேட்டி ஒன்றில் விளக்கமளித்துள்ளார். அவர், அனுபமாவும், பும்ராவும்  இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் தொடர்வது பிடிக்காமலே சிலர் இவ்வாறு செய்திகளை பரப்பி வருகின்றனர். இந்த செய்தியால் தற்போது இருவரும் இன்ஸ்டாகிராமில் தொடர்வதை நிறுத்திவிட்டனர் என நினைக்கிறேன்.

அனுபமா தற்போது படப்பிடிப்புக்காக ராஜ்கோட் சென்றுள்ளார். இந்த நிலையில் ஏன் இப்படியொரு வதந்தியை பரப்புகின்றனர் என தெரியவில்லை. ஆனால் அதில் உண்மையில்லை.  இத்தகைய வதந்திகளை நாங்கள் வேடிக்கையாக தான் எடுத்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
 


Advertisement