13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
தல அஜித்துக்கு இப்படி ஒரு பதவியா? சினிமாவையும் தாண்டி அடிச்சு தூக்கும் நம்ம தூக்குதுறை!
தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் தல அஜித். தமிழ் மாட்டு இல்லாது, இந்திய அளவில் அஜித்துக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தல பாடம் வெளியாகப்போகிறது என்றாலே அவரது ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கொண்டாட ஆரம்பித்துவிடுவார்கள்.
கடைசியாக இயக்குனர் சிவா இயக்கத்தில், விஸ்வாசம் படத்தில் நடித்திருந்தார் அஜித். கடந்த ஜனவரி 10 ஆம் தேதி வெளியான படம் இன்றுவரை பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்ததாக பிங்க் படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார் தல அஜித்.
சினிமாவையும் தாண்டி கார் ரேஸ், பைக் ரேஸ் என பல்வேறு திறமைகள் கொண்டவர் அஜித். இந்நிலையில் சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி கேம்பஸில் பயிலும் ஏரோநாட்டிகல் மாணவர்கள் ஆளில்லா விமானங்கள் குறித்து ஆய்வு செய்ய தக்ஷா என்னும் குழுவை உருவாக்கினர்.
இந்த குழுவுக்கு நடிகர் அஜித் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். மேலும் ஆஸ்திரேலியாவில் நடந்த `Medical Express 2018 UAV Challenge’ போட்டியில் அந்த குழு சர்வதேச அளவில் இரண்டாம் இடம் பிடித்தது.
ஆளில்லா ஏர் டாக்சி தயாரிக்கும் திட்டத்தில் 10 மாதங்களாக பணியாற்றிய நடிகர் அஜித்தின் பங்களிப்பை பாராட்டி அவருக்கு அண்ணா பல்கலைக்கழகம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் நடிகர் அஜித் கவுரவ பதவியில் ஆலோசகராக பணியாற்றவேண்டும் என்று கேட்டுள்ளது.