சினிமா

இதெல்லாம் தேவையா? நெட்டிசனின் அந்த கேள்விக்கு கூலாக பதிலளித்த தொகுப்பாளினி அஞ்சனா! ஷாக்கான ரசிகர்கள்!

Summary:

சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேல்  தொகுப்பாளினியாக களமிறங்கி ரசிகர்க

சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேல்  தொகுப்பாளினியாக களமிறங்கி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் விஜே அஞ்சனா. அதனைத் தொடர்ந்து அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஆஸ்தான தொகுப்பாளினியாக மாறினார்.

விஜே அஞ்சனா டிவி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி விருது விழாக்கள், ஆடியோ வெளியீட்டு விழா என பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். இந்த நிலையில் அஞ்சனா 2016 ஆம் ஆண்டுகயல் பட நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு தற்போது ஒரு மகன் உள்ளார். 

இந்த நிலையில் சமூகவலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் அஞ்சனா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். மேலும் அண்மையில் அவர் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்பொழுது ரசிகர் ஒருவர், ஐ லவ் யூ, என்னை இரண்டாவது திருமணம் பண்ணிக்கிறீங்களா என்று கேட்டுள்ளார்.

அதற்கு அஞ்சனா, நான் சொன்னேன் மௌலி கிட்ட, அதுக்கு அவர் அட்ரஸ் மட்டும் வாங்கு கொரியர் பண்ணி விட்டுடுறேனு சொன்னார். அப்பன்னா பாருங்க, அவர் எவ்ளோ கஷ்டப்பட்றாருனு. இதெல்லாம் தேவையா பாலாஜி என்று கூலாக பதிலளித்துள்ளார்.


Advertisement