கணவரின் செயலால் கடும் கோபமான VJ அஞ்சனா! வைரலாகும் ட்விட்டர் பதிவு!

கணவரின் செயலால் கடும் கோபமான VJ அஞ்சனா! வைரலாகும் ட்விட்டர் பதிவு!



Anjana

சன் மியூசிக்கில் பிரபல தொகுப்பாளினிகளில் ஒருவர் VJ அஞ்சனா. ரசிகர்கள் மத்தியில் இவர் மிகவும் பிரபலமானவர். இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் பெரும்பாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், பல்வேறு மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார் அஞ்சனா.

இந்நிலையில் கயல் பட நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் அஞ்சனா. இவர்களுக்கு சமீபத்தில் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. கர்ப்பமாக இருந்த காரணத்தால் மீடியாவை விட்டு ஒதுங்கி இருந்தார் அஞ்சனா.

anjana

தற்போது குழந்தை பிறந்தபிறகு மீண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் தற்போது 
அவரது ட்விட்டர் கணக்கில், மை ஹஸ்பண்ட் இஸ் மை கண்கண்ட தெய்வம் என்று ட்வீட் செய்யப்பட்டிருந்தது. 

ஆனால் அந்த ட்வீட்டை அஞ்சனா பதிவிடவில்லை போலிருக்கிறது. தற்போது அந்த ட்வீட்டிற்கு ரீட்வீட் செய்து அனுப்பியுள்ளார். அதில் எப்படி நான் இல்லாத நேரத்தில் எப்படி என்னுடைய ஃபோனை எடுத்து பயன்படுத்தலாம்.மவனே எனக்கு சந்தர்பம் கிடைக்கும் போது நான் இதை உனக்கு திரும்ப பண்ணுவேன் என்று ட்வீட் செய்துள்ளார்.