சினிமா

அடேங்கப்பா.. செம தில்லுதான் உங்களுக்கு ! அந்தரத்தில் அசால்டாக நடிகை அஞ்சலி செய்த காரியத்தை பார்த்தீர்களா!

Summary:

தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அதன

தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அதனை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளிவந்த அங்காடித்தெரு படம் அவரது திரைவாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து  அஞ்சலி எங்கேயும் எப்போதும், இறைவி, தரமணி என தொடர்ந்து பல  படங்களில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் அஞ்சலி தற்போது மணிரத்னம் தயாரிப்பில் ஒன்பது முன்னணி இயக்குனர்களின் படைப்பில் உருவாகிவரும் நவரசா என்ற ஆந்தாலஜி படத்தில்  நடித்து வருகிறார். அதில் அவர் சர்ஜன் இயக்கத்தில் உருவாகும் துணிந்தபின் என்ற பகுதியில் நடிக்கிறார். மேலும் அவர் தெலுங்கிலும் சில திரைப்படங்களில் நடித்து  வருகிறார்.

அஞ்சலி எப்பொழுதும் சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்க கூடியவர். மேலும் அடிக்கடி வித்தியாசமான போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். இந்த நிலையில் அவர் தற்போது அந்தரத்தில் தொங்கியவாறு யோகா செய்து அசத்தும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் அஞ்சலி உங்களுக்கு செம தில்லுதான் என கமெண்டு செய்து வருகின்றனர்.


Advertisement