சினிமா

மீண்டும் விஜய்டிவி நிகழ்ச்சியில்..பிக்பாஸை தொடர்ந்து அனிதா சம்பத்திற்கு அடித்த அதிர்ஷ்டம்!! .வெளியான சூப்பர் தகவல்!!

Summary:

பிக்பாஸை தொடர்ந்து அனிதா சம்பத் விஜய் தொலைக்காட்சி ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் கலந்து

பிக்பாஸை தொடர்ந்து அனிதா சம்பத் விஜய் தொலைக்காட்சி ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சென்ற நிலையில் ஜனவரி 17 முடிவுக்கு வந்தது. இதில் நடிகர் ஆரி வெற்றியாளரானார். இதில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்துகொண்டவர் பிரபல செய்தி வாசிப்பாளரும், நடிகையுமான அனிதா சம்பத்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடுமையான போட்டியாளராக திகழ்ந்து வந்த அவர் டாஸ்க்குகள் அனைத்தையும் சிறப்பாக செய்து வந்தார். இவர் பைனல்ஸ் வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதற்கெடுத்தாலும் அழுவது, ஆரியுடன் சண்டை போடுவது என ரசிகர்களின் கோபத்திற்கு உள்ளானார். அதனைத் தொடர்ந்து அவர் குறைந்த வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். மேலும் அவர் வெளியேற்றப்பட்ட ஓரிரு நாட்களில் அவரது தந்தை மரணம் அடைந்தார். 

அதனால் மிகவும் மனம் உடைந்துப் போன அனிதாவிற்கு ரசிகர்கள், பிக்பாஸ் சக போட்டியாளர்கள் பலரும் ஆறுதல் கூறி வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் கொண்டாட்டம் நடைபெற்றது. அதில் அனிதா மற்றும் அவரது கணவர் கலந்துகொண்டனர்.
அத்தகைய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அனிதா அனைவரின் வாழ்த்துக்களுக்கும், அன்புக்கும் நன்றி. எனது பாத்ரூம் பாடல்களை தாங்கிக் கொண்டதற்கும் நன்றி. இந்த லட்சணத்துல ஸ்டார்ட் மியூசிக்கில் வேற பாடிருக்கேன் எனக் கூறியுள்ளார். இதன்மூலம் அனிதா சம்பத் விஜய் தொலைக்காட்சியில் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சி விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement