பிக்பாஸ் அனிதா சம்பத் அடிக்கடி நினைத்து கண்கலங்கும் அவரது அம்மாவை பார்த்தீர்களா! வைரலாகும் குடும்ப புகைப்படம்!

பிக்பாஸ் அனிதா சம்பத்தின் குடும்ப புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


anitha-sampath-family-photo-viral

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி  பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சமீபத்தில் தொடங்கப்பட்டு ஒரு வாரம் முடிவடைந்த  நிலையில் நாளுக்கு நாள் மிகவும் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகின்றது.

மேலும் பிக்பாஸ் வீட்டிற்குள் ஒவ்வொரு உற்சாகங்களும், மோதல்களும் சூடுபிடித்து வருகிறது.  மேலும் வார இறுதியில் நடிகர் கமலும் போட்டியாளர்களை சந்தித்து உரையாடியுள்ளார்.


இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்துகொண்டவர் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்.  இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சில நாட்களிலேயே சுரேஷ் சக்கரவர்த்தியுடன் வாக்குவாதம், சண்டை என சர்ச்சையில் சிக்கினார்.

bigboss

 மேலும் அவர் அறந்தாங்கி நிஷாவை குறித்து பேசும்போதெல்லாம், தனது அம்மா நிறகுறைவாக இருப்பார் அதனால் அவர் தாழ்வு மனப்பான்மையில் வெளியேவர தயங்குவார்.  அவர் நிஷா அக்காவை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என  அடிக்கடி உருக்கமாக பேசி கண்கலங்குவார். இந்த நிலையில் தற்போது அனிதா சம்பத் பெற்றோருடன் இருக்கும் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.