அட.. இது சூப்பர் நியூஸாச்சே! அட்லீ- ஷாருக்கான் படத்திற்கு இசையமைப்பாளர் யார் தெரியுமா?? வெளிவந்த அதிகாரபூர்வ அறிவிப்பு!!

தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இப்படத்தில் இவரது இசையில் வெளிவந்த ஒய் திஸ் கொலவெறி பாடல் அனைத்து மக்கள் மனதையும் பெருமளவில் கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து அவருக்கு ஏராளமான வாய்ப்புகளும் குவிந்தது.
அனிருத் ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்களின் படங்களுக்கும் இசையமைத்து தற்போது முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். மேலும் தனது அசத்தலான இசையால் அவர் இளைஞர்களை கவர்ந்து வருகிறார். இந்த நிலையில் பாலிவுட்டில் அட்லி- ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் ஜவான் படத்திற்கும் அனிருத் இசையமைக்கவுள்ளார்.
Dreams do come true! Scoring music for the Badshah himself @iamsrk 🥳🥳🥳 Thank you and so proud of my brother @Atlee_dir and this is going to be too special for us ❤️❤️❤️ Here is #Jawan teaser - https://t.co/0DWWxA5zKr
— Anirudh Ravichander (@anirudhofficial) June 3, 2022
Please bless us all 😊😊😊@RedChilliesEnt
இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, கனவுகள் நனவாகும்! பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுக்கு இசையமைக்கிறேன். நன்றி. என் சகோதரன் அட்லீயை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். மேலும் இந்த படம் எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமையும் என தெரிவித்துள்ளார்.