சினிமா

இந்த பொண்ணுக்கு இப்படி ஒரு பிரச்சனையா..? வெளியில் செல்லவே பயப்படும் அஜித்தின் ரீல் மகள்..! இதுதான் காரணமாம்..

Summary:

தனக்கு வெளியே செல்ல பயமாக இருப்பதாக அஜித்தின் ரீல் மகள் அனிகா தெரிவித்துள்ளார்.

தனக்கு வெளியே செல்ல பயமாக இருப்பதாக அஜித்தின் ரீல் மகள் அனிகா தெரிவித்துள்ளார்.

என்னை அறிந்தால், விஸ்வாசம் ஆகிய படங்களில் அஜித்துக்கு மகளாக நடித்தன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை அனிகா. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துவரும் இவர் சமூக வலைத்தளங்களிலும் பயங்கர ஆக்டிவாக இருந்துவருகிறார். எப்போதும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் திட்டும் வாங்கிவருகிறார் அம்மணி.

அதுபோக, இவர்தான் அடுத்த நயன்தாரா எனவும் சொல்லிவருகின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் தான் வெளியே செல்லவே பயமாக இருப்பதாக கூறியுள்ளார் அனிகா. ரசிகர்கள் தொல்லைதான் காரணமா என யோசித்தால் அம்மணிக்கு அதெல்லாம் பிரச்சனை இல்லையாம்.

நான் மிகவும் உயரம் குறைவாக இருக்கிறேன் என்றும் இன்னும் நான் வளர வேண்டும் என்றும் தன்னிடம் பலர் கூறிவருவதாகவும், அதனால் வெளியில் செல்லவே தனக்கு பயமாக இருப்பதாகவும் தனது சமூக வலைத்தள பக்கத்தின் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார் அனிகா.


Advertisement