அடேங்கப்பா.. நயன்தாராவை மிஞ்சிடுவார் போல! மெழுகு சிலை போல சொக்கவைக்கும் அனிகா! வைரல் புகைப்படங்கள்!!

அடேங்கப்பா.. நயன்தாராவை மிஞ்சிடுவார் போல! மெழுகு சிலை போல சொக்கவைக்கும் அனிகா! வைரல் புகைப்படங்கள்!!


anika-photoshoot-viral

தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற என்னை அறிந்தால் படத்தில் அவரது மகளாக நடித்து அறிமுகமானவர் நடிகை அனிகா சுரேந்திரன். அதனை தொடர்ந்து அவர் நானும் ரவுடிதான், மிருதன் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அனிகா சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார். 

பின்னர் அவர் மீண்டும் அஜித்துடன் இணைந்து விஸ்வாசம் படத்தில் நடித்திருந்தார். அப்படத்திலும் அனிகா அஜித்துக்கு மகளாகவே நடித்திருந்தார். மேலும் விசுவாசம் படத்தின் மூலம் அவர் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். அவரது எதார்த்தமான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.

இந்நிலையில் தற்போதும் சில படங்களில் நடித்து வரும் அனிகா சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கக் கூடியவர். அவ்வப்போது அவர் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் வகையில் வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். அவ்வாறு அவர் தற்போதும் மெழுகு சிலை போல இருக்கும் அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் நயன்தாராவையே மிஞ்சிடுவார் போல என கமெண்ட் செய்து வருகின்றனர்.