சினிமா

வாய்ப்பு கிடைத்தும் அஜித்துடன் நடிக்க முடியாமல் போய்விட்டது. பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி உருக்கம்! இதுதான் காரணமா?

Summary:

Anchor divya dharshini rejected the chance to act with ajith

தமிழ் திரையுலகின் தல நம்ம அஜித். தனது சொந்த முயற்சியாலும், திறமையாலும் இந்த அளவிற்கு வளர்ந்துள்ளார் தல அஜித். இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு கடந்த 10 ஆம் தேதி விஸ்வாசம் படம் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது.

விஸ்வாசம் பாடத்தை தொடர்ந்து பிங்க் பட ரீமேக்கில் நடிக்கிறார் அஜித். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் இந்த படத்தை தயாரிக்கிறார். பொதுவாக அஜித் என்றாலே அவருடன் நடிக்க நடிகைகள் அனைவரும் ஆவலுடன் காத்திருப்பனர். ஒருபடத்திலாவது அஜித்துடன் நடிக்கவேண்டும் என ஆசைப்படும் நடிகைகள்கூட உண்டு.

ஆனால், அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும், அதை வேண்டாம் என கூறியுள்ளார் பிரபல விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளினி DD . திவ்யதர்ஷனி எனும் டிடி. 20 வருடங்களாக தொகுப்பாளினியாக இருக்கும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். விஜய் டிவி எந்த நிகழ்ச்சியை நடத்தினாலும் அதில் தொகுப்பாளினியாக டிடி தான் இருப்பார்.

இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டிடி, தமக்கு அஜித்துடன் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், ஆனால் அப்பொழுது தமக்கு அறுவை சிகிச்சை செய்திருந்ததால், அஜித்துடன் நடிக்க மறுத்துவிட்டதாகவும் கூறினார். அஜித்துடன் நடிக்க முடியாதது தமக்கு மிகவும் வருத்தம் அளிப்பதாவதும் கூறியுள்ளார் டிடி.


Advertisement