சினிமா

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன நாடோடிகள் பட நடிகை- அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Summary:

ananya latest pic

தமிழில் நடிகர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான நாடோடிகள் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனன்யா.  இந்தப் படத்தில் இவரது நடிப்பு பரவலான பாராட்டைப் பெற்றுத் தந்தது. மேலும் இப்படத்திற்காக இவர் சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் தொலைக்காட்சி விருதினைப் பெற்றார்.

அதன்பிறகு சீடன், எங்கேயும் எப்போதும், புலிவால், அதிதி என பல படங்களில் நடித்து ரசிகர்களை சேர்த்துள்ளார்.மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு ஆஞ்சநேயா என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை அனன்யா. தற்போது தனது குடும்பத்துடன் கொச்சியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது மிகவும் உடல் எடை குறைந்து புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.அப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எப்படி இருந்தவர் இப்படி மாறிட்டாரே என கமெண்ட் செய்து வருகிறார்.


Advertisement