குழந்தையே பிறக்க போகும் சமயத்தில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யும் பிரபல நடிகை!

குழந்தையே பிறக்க போகும் சமயத்தில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யும் பிரபல நடிகை!



amyjackson- planning her marriage in vanis

தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ஐ, 2.0 என சில படங்களே நடித்த போதும், தமிழின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததால், தமிழில் வேகமாக முன்னேறினார். லண்டனைச் சேர்ந்த எமி 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை. 

மீண்டும் லண்டன் பறந்த அவர் அங்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலிப்பதாக அறிவித்தார். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதாக கடந்த மார்ச் மாதம் எமி அறிவித்தார். இது தமிழ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து கர்ப்பிணியான எமிக்கும், அவரது காதலருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

Amy jackson

தற்போது 22 வார கர்ப்பிணியாக இருக்கிறார் எமி. வரும் செப்டம்பரில் அவருக்கு குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எமியும், ஜார்ஜும் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் எமி, ஜார்ஜுடன் சேர்ந்து வெனிஸுக்கு சென்றுள்ளார். தங்களின் திருமணம் குறித்து திட்டமிட அங்கு சென்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் எமிக்கு கிரேக்க தீவில் திருமணம் செய்து கொள்ள ஆசையாக உள்ளது என்று கூறப்பட்டது. இந்நிலையில் எமி இத்தாலியில் உள்ள வெனிஸ் நகரில் திருமணம் செய்யப் போகிறாராம்.மேலும் எமி பெரிதாக இருக்கும் தனது வயிறு தெரியும்படி புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 

View this post on Instagram

We woke up in Italy! PASTA FOR BREKKY!!!

A post shared by Amy Jackson (@iamamyjackson) on