அடேங்கப்பா.. வேற லெவல்! குழந்தை பெற்ற பிறகும் எமி செம ஃபிட்டாக இருக்க இதுதான் காரணமா?? வைரலாகும் வீடியோ!!

அடேங்கப்பா.. வேற லெவல்! குழந்தை பெற்ற பிறகும் எமி செம ஃபிட்டாக இருக்க இதுதான் காரணமா?? வைரலாகும் வீடியோ!!


amy-jackson-workout-video-viral

தமிழ் சினிமாவில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த மதராசபட்டினம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து எமி தனுஷ், விஜய், உதயநிதி ஸ்டாலின், விக்ரம், ரஜினி, என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்தநிலையில் அவர் பிரிட்டனை சேர்ந்த ஜார்ஜ் பெனாய்டோ என்பவரை காதலித்து வந்தார். இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. ஆனால் அவர்களுக்கு திருமணம் நடைபெறுவதற்கு முன்பு கடந்த ஆண்டு அழகிய ஆண்குழந்தை பிறந்தது. 

குழந்தை பிறந்ததற்கு பிறகு எமி ஜாக்சன் உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் அதற்காக அவர் கடுமையான உடற்பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் அவர் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.  அது வைரலாகி வருகிறது.