"பெண் என்றால் கிண்டல் செய்வதா?" உருவகேலியால் கடுப்பான எமி ஜாக்சன்.!

"பெண் என்றால் கிண்டல் செய்வதா?" உருவகேலியால் கடுப்பான எமி ஜாக்சன்.!


Amy jackson talking about bodyshaming

2010ம் ஆண்டு "மதராசப்பட்டணம்" படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் எமி ஜாக்சன். தொடர்ந்து பல தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கில மொழிப் படங்களில் நடித்து வருகிறார் எமி ஜாக்சன்.

Amy

தொடர்ந்து தமிழில் ஷங்கர் இயக்கத்தில் விக்ரமுடன் ஐ, தங்கமகன், தாண்டவம், கெத்து, விஜயுடன் தெறி போன்ற படங்களில் நடித்துள்ளார். அதன் பின் பட வாய்ப்புகள் அமையாததால் சினிமாவை விட்டு சிறிது காலம் விலகியிருந்தார்.

நீண்ட நாட்கள் கழித்து தற்போது தமிழில், அருண் விஜயுடன் "மிஷன் அத்தியாயம் 1" படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு வித்தியாசமான தோற்றத்தில் ஒரு புகைப்படத்தை எமி ஜாக்சன் வெளியிட்டிருந்தார்.

Amy

அதைப்பார்த்த பலரும் ஓபன் ஹெய்மர் படத்தில் வரும் சிலியன் மார்பி போல் உள்ளார் என்று கிண்டலடித்தனர். இதற்கு பதிலடி கொடுத்த எமி ஜாக்சன், "பெண் என்றால் கிண்டல் செய்வதா? ஒரு படத்திற்காக தான் உடல் எடையை குறைத்துள்ளேன்" என்று எமி ஜாக்சன் காட்டமாக கூறியுள்ளார்.