என்னது.. மீண்டும் காதலில் விழுந்தாரா எமி ஜாக்சன்! அதுவும் இந்த டிவி நடிகருடன்.. தீயாய் பரவும் ஷாக் தகவல்!!

என்னது.. மீண்டும் காதலில் விழுந்தாரா எமி ஜாக்சன்! அதுவும் இந்த டிவி நடிகருடன்.. தீயாய் பரவும் ஷாக் தகவல்!!


amy-jackson-falling-with-love-again

தமிழில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த மதராசபட்டினம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இப்படத்தில் வெளிநாட்டு நடிகையாக இவரது நடிப்பு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து எமி தனுஷ், விஜய், உதயநிதி ஸ்டாலின், விக்ரம், ரஜினி, என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இந்தநிலையில் அவர் பிரிட்டனை சேர்ந்த ஜார்ஜ் பெனாய்டோ என்பவரை காதலித்து வந்தார். இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. ஆனால் அவர்களுக்கு திருமணம் நடைபெறுவதற்கு முன்பே அழகிய ஆண்குழந்தை பிறந்தது.  ஆனால் பின்னர் எமி ஜாக்சனுக்கு ஜார்ஜ் பெனாய்டோவுடன் திருமணம் நடைபெறவில்லை.

Amy jackson

இந்த நிலையில் தற்போது எமி ஜாக்சனுக்கு மீண்டும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது எமி ஜாக்சன் இங்கிலாந்தை சேர்ந்த நடிகர் எட் வெஸ்ட்விக்கும் காதலிப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. எட் வெஸ்ட்வி gossip girl என்ற தொடரில் நடித்து பிரபலமானவராம்.