விவாகரத்துக்கு பிறகு நடிகை எமி ஜாக்சன் இந்த பிரபல நடிகரை காதலிக்கிறாரா... வெளியான புகைப்படத்தால் சர்ச்சை...

விவாகரத்துக்கு பிறகு நடிகை எமி ஜாக்சன் இந்த பிரபல நடிகரை காதலிக்கிறாரா... வெளியான புகைப்படத்தால் சர்ச்சை...


Amy Jackson dating popular actor ed Westwick

தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து எமி ஜாக்சன் தனுஷ், விஜய், விக்ரம், ரஜினி என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் எமி ஜாக்சன் கோலிவுட்டில் சூப்பர் கேர்ள் என்ற வெப்சீரிசிலும் நடித்துள்ளார். இந்தநிலையில் அவர் பிரிட்டனை சேர்ந்த ஜார்ஜ் பெனாய்டோ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் இருவருக்கும் 2019 ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

Ed Westwick

இதனையடுத்து இருவருக்கும் இடையே ஏதோ பிரச்சனைகள் வரவே விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் தற்போது நடிகை எமி ஜாக்சன், பிரபல நடிகரான எட் வெஸ்ட்விக் என்பவருடன் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் எட் வெஸ்ட்விக் என்பவர் இதற்கு முன் பல நடிகைகளுடன் கிசுகிசுவில் சிக்கியிருக்கிறார்.