"மோசமான அணுகுமுறை" சாம்சங் தொழிலாளர்கள் கைதுக்கு இயக்குனர் பா. ரஞ்சித் கண்டனம்..!
குழந்தை பிறக்கப் போகும் இந்த சமயத்தில் கூட இப்படி ஒரு கவர்ச்சி போஸ் தேவையா? நடிகை எமி ஜாக்சனை மிகவும் மோசமாக திட்டி தீர்க்கும் ரசிகர்கள்!
தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ஐ, 2.0 என சில படங்களே நடித்த போதும், தமிழின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததால், தமிழில் வேகமாக முன்னேறினார். லண்டனைச் சேர்ந்த எமி 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை.
மீண்டும் லண்டன் பறந்த அவர் அங்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலிப்பதாக அறிவித்தார். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதாக கடந்த மார்ச் மாதம் எமி அறிவித்தார். இது தமிழ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து கர்ப்பிணியான எமிக்கும், அவரது காதலருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
குழந்தை பிறந்த பின்னர் அவர்களது திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் செப்டம்பரில் அவருக்கு குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூகவலைதளங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை, வீடியோக்களை பதிவேற்றுவதை வழக்கமாகக் கொண்டவர் எமி. தற்போது கர்ப்பமாக இருக்கும் சூழலிலும் அதே போன்ற புகைப்படங்களை அவர் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.
இந்நிலையில் அப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குழந்தை பிறக்கும் நாள் நெருங்கிய நிலையிலும் இப்படி ஒரு கவர்ச்சி போஸ் தேவையா என மிகவும் மோசமாக நடிகை எமி ஜாக்சனை திட்டித் தீர்த்து வருகின்றனர்.