"அழக்கூட விடமாற்றங்க" - பெண்களுக்கு வில்லனாக மாறிய முத்துக்குமரன்.. களேபரமாகும் பிக் பாஸ் வீடு.!
32 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ரஜினிகாந்துடன் இணையும் அமிதாப் பச்சன்!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் ஜெயிலர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் இயக்குனர் நெல்சன், நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு சொகுசு கார்களை பரிசாக கொடுத்தார்.
இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், அனிரூத் இசையில், டிஜெ ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் தலைவர் 170 படத்தில் நடிக்கவுள்ளார். படத்தின் முதற்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தில், மஞ்சு வாரியோர், ராணா டகுபதி, ஃபஷத் பசில் இணைத்துள்ளார் என்று லைகா புரொடக்சன்ஸ் தெரிவித்துள்ளது. தற்போது இந்த திரைப்படத்தில் அமிதாப் பச்சன் நடிக்க இருக்கிறார் என்று தகவல் தெரிவித்துள்ளது. சுமார் 32 ஆண்டுகளுக்கு பின் அமிதாப் பச்சன் ரஜினிகாந்துடன் இணைய உள்ளார் இன்று தகவல் வெளியாகியுள்ளது.