சினிமா

குழந்தையாய் நான்! அமலாபால் போட்ட ட்விட்! கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்! புகைப்படம்!

Summary:

Amala paul tamil twit

சிந்து சமவெளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அமலாபால். பலவிதமான கருத்துக்களை பெற்றது சிந்து சமவெளி திரைப்படம். அதை தொடர்ந்து மைனா திரைப்படத்தில் நடித்தார் அமலாபால். அந்த திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து வாய்ப்புகள் குவிய தொடங்கின.

நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக வேட்டை படத்தில் நடித்தார். அதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார் அமலாபால். தலைவா திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாகா நடித்திருந்தார். அந்த திரைப்படத்தின் இயக்குனர் AL விஜயுடன் ஏற்பட்ட காதலால் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துவிட்டனர்.

அதன்பிறகு மீண்டும் சினிமாவில் முழுநேரமாக கவனம் செலுத்த தொடங்கியுள்ளார் நடிகை அமலாபால். இந்நிலையில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை அமலாபால் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் பாறையில் படுத்தவாறு கருப்பு வெள்ளை புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் அமலாபால்.

மேலும், அந்த டிவீட்டை தமிழில் வெளியிட்டுள்ளார் அமலாபால். அதில் அவர், ‘இயற்கையின் மடியில் குழந்தையாய் நான்' எனத் தெரிவித்துள்ளார். இந்த ட்விட்டை பார்த்த ரசிகர்கள் ஒருசிலர் அமலாபாலை திட்டியும், ஒருசிலர் ஆபாச வார்த்தைகளில் அர்ச்சனை செய்தும், ஒருசிலர் அமலாபாலை பாராட்டியும் வருகின்றனர்.



 


Advertisement