47 வயது பிரபல முன்னணி இயக்குனருடன் ஜோடி சேரும் அமலா பால்! வெளிவந்த தகவலால் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

47 வயது பிரபல முன்னணி இயக்குனருடன் ஜோடி சேரும் அமலா பால்! வெளிவந்த தகவலால் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!amala-paul-act-as-pair-to-gawtham-menan

தமிழ் சினிமாவில் வெவ்வேறு இயக்குனர்கள், தனித்தனியாக சுவாரசியமான, வித்தியாசமான கதைகளை இயக்கி உருவாகி வரும் ஆந்தாலஜி திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இவ்வாறு வெளியான சில்லு கருப்பட்டி, பாவகதைகள் போன்ற அந்தாலஜி படங்கள் செம ஹிட்டானது.

இந்த நிலையில் தற்போது முன்னணி இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், வெங்கட்பிரபு, விஜய், நலன் குமாரசாமி ஆகியோர் இணைந்து நான்கு வித்தியாசமான கதைகளில் குட்டி ஸ்டோரி என்ற ஆந்தாலஜி திரைப்படம் உருவாகி வருகிறது. காதலை மையமாகக் கொண்டு உருவாகும் இதன் முதல் கதையில் கௌதம் மேனன் மற்றும் அவருக்கு ஜோடியாக அமலாபால் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

kutty story

 மேலும் இரண்டாவது கதையில் விஜய் இயக்க வருண் மற்றும் சாக்ஷி அகர்வால் நடிக்கின்றனர். அதனைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கும் கதையில் வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் வில்லனாக நடித்த அமிதாஷ் மற்றும் மேகா ஆகாஷ் நடிக்கின்றனர். பின்னர் நலன் குமாரசாமி இயக்கும் கதையில் விஜய் சேதுபதி மற்றும் அவருக்கு ஜோடியாக அருவி அதிதி பாலன் நடிக்கின்றனர்.