BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
பூஜையுடன் கோலாகலமாக தொடங்கிய ஆல்யாவின் புதிய சீரியல்.. புகைப்படம் இதோ.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆல்யா மானசா. அந்த ஒரே சீரியலில் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று பிரபலமானார்.
மேலும் அந்த சீரியலில் இணைந்து நடித்த சஞ்சீவ் என்பவரை ஆல்யா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அண்மையில் தான் ஒரு பெண் குழந்தை பிறந்தது. திருமணத்திற்கு பிறகு சஞ்சீவ் மட்டுமே நடித்து வந்த நிலையில் தற்போது ஆல்யா புதிய தொடர் ஒன்றில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் ஆல்யா மானஸா நடிக்கும் புதிய சீரியலின் பூஜை புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஆல்யா. அந்த புகைப்படத்தில் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் திருமணம் தொடரில் நடித்து வரும் சித்துவும் இருக்கிறார். எனவே, சித்துவுடன் தான் ஆல்யா மானஸா நடிக்க உள்ளார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.